search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியபாளையம் நிலம் ஆக்கிரமிப்பு"

    பெரியபாளையம் அருகே ரூ. 40 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர். #Landoccupation

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே கோடு வெளி கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த நீர்நிலை மற்றும் மடுகு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி மீட்டனர்.

    வெங்கல் அருகே கோடு வெளி கிராமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை 20 நபர்கள் வேலி அமைத்தும்,வரப்பு மூலமும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

    இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்க கலெக்டர் சுந்தரவல்லி அதிரடி உத்தரவிட்டார்.

    அதன்படி திருவள்ளூர் தாசில்தார் தமிழ்செல்வன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் இரண்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் 45 ஏக்கர் பரப்பளவில் 20 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை அதிரடியாக அகற்றினர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ.36கோடி ஆகும்.

    இதேபோல் அதே பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மடுகு புறம் போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக வருவாய்துறை அதிகாரிகள் அகற்றி மீட்டனர். இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும்.

    ஒரேநாளில் இரண்டு பகுதியில் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.40 கோடி ஆகும்.

    அப்பகுதியில் வருவாய் துறையினர் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.#Landoccupation

    ×